யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?
சோழர் காலம்
தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன்ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர்ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.
சான்றுகள்
கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில்தான் எந்தவொரு சமூகம் அல்லது அரசாட்சியின் வரலாற்றையும் எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டு,தொல்பொருள், மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் முற்கால சோழர்கள் பற்றிசிறந்த சான்றுகளாக உள்ளன.
கல்வெட்டுகள்
சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை மற்றும் சோழர்கால அரசியல்,பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதிக்ககப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோவில்என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கல் வெட்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலமுக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.
மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சி முறையைப் பற்றி திருவந்திபுரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. குடவோலை முறை, கிராம நிர்வாகம், வரி வசூல் முறை, நில வருவாய் முறை ஆகியவை குறித்துஉத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. சில கல்வெட்டுகளில் மெய்கீர்த்திகள் எனப்படும் மன்னர்களின் வெற்றி வரலாறுகளும் காணப்படுகின்றன.
அன்பில் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டுகள், கரந்தை செப்பேடுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள் ஆகியன சோழர்களைப் பற்றிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கின்றன. சைவ மதம்அங்கு சிறப்புடன் இருந்தது குறித்து தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர்களின் சமகால அரசர்களான சேரர், பாண்டியன், இராஷ்டிர கூடர், கங்கா ஆகியோர்வெளியிட்ட கல்வெட்டுகளும் சோழர்களின் சிறப்புகள் பற்றிக் கூறுகின்றன.
நினைவுச் சின்னங்கள்:
சோழர்கால வரலாற்றை அறிந்துகொள்ள நினைவுச் சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாய் பயன்படுகின்றன. நினைவுச் சின்னங்கள் ஆலயங்களின் பகுதிகளாக உள்ளன. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர்ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராபுரத்திலுள்ள ஐராவதீஸ்வரர் ஆலயம், திருபுனவத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயம் சோழர்காலத்தின் முக்கிய நினைவுச் சின்னங்கள் ஆகும்.
நாணயங்கள்:
சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும், வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில்வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சினனமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பபடுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்றநாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். சோழ அரசர்களின் காலங்களை வரிசைப்படுத்தவும், சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்துகொள்ளவும் இந்நாணயங்கள் பெரிதும்பயன்படுகின்றன.
இலக்கியம்:
சங்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் பற்றி, அறிந்துகொள்ள இலக்கியங்கள் சிறந்த சான்றுகளாக உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணம் சைவ பக்தர்களைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாம்குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார். ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஒட்டக்சுத்தரின் மூன்று உலாக்கள், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் சோழர்கள் பற்றி பயனுள்ளபல தகவல்களைத் தருகின்றன. வீர சோழியம், வநசோழ சரிதம், ஸதல புராணம், சோழ வம்ச சரிதம் ஆகிய இலக்கியங்கள் முற்கால சோழ அரசர்கள் பற்றி அறிய உதவும் சறந்த இலக்கியச் சான்றுகளாகஉள்ளன.
அயல்நாட்டு சான்றுகள்:
சோழ அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையயே இருந்த உறவுகள் பற்றி இலங்கை இலக்கியமான மகாவம்சம் கூறுகின்றது. மேலும் இந்நூல் இலங்கையில் சோழர் ஆட்சி குறித்தும் கூறுகின்றது.ஐரோப்பிய பயணி மார்க்கோ போலோ, அயல்நாட்டு எழுத்தாளர் மெகஸ்தனிஸ் ஆகியோர் சோழர்களைப் பற்றி பல சுவையான தகவல்களைக் கூறுகின்றனர். அல்பெரூணி எனும் முகமதியவரலாற்றாசிரியரும் சோழர்கள் பற்றி எழுதியுள்ளார்.
பிற்கால சோழ அரச குலம்:
பிற்கால சோழ அரச மரபை உருவாக்கியவர் விஜயாலயன் என்ற அரசர் ஆவார். இவர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி கி.மு. 850 ல் அதை சோழ நாட்டின் தலைநகராக்கினார். பல்வலமன்னர் அபராஜிதனை தோற்கடித்து அவரது இராஜ்ஜியத்துடன் இணைத்துக்கொண்டார். சிவ பக்தரான இவர் பல இடங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்.
முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:
உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் பற்றி நிறைய தகவல்களைத் தருகின்றன. இவர் ஆதித்யனின் மகனாவார். இவர் டிதன் இந்தியாவின் பல பகுதிகளை வென்று தனது நாட்டுடன்இணைந்து தமது பேரரசின் எல்லையை வடக்கே நெல்லூர் வரை விரிவுபடுத்தினார். பாண்டிய மன்னரைத் தோற்கடித்து வெற்றிகரமாக மதுரையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியை போற்றும் விதமாகஇவருக்கு ‘மதுரை கொண்டான்’ என்ற பட்டடம் வழங்கப்ப்டடது. அத்துடன் மேலும் இலங்கை மற்றும் பாண்டிய அரசர்களின் கூட்டு ராணுவத்தைத் தோற்கடித்ததால் இவர் ‘மதுரையும் ஈழமும்கொண்டான்’ என்ற பட்டம் பெற்றார்.
இவர் ஒரு சிவபக்தர். இவர் சிதம்பத்தில் உள்ள நடராஜர் ஆலயத்திற்கு பொன்னால் கூரை வேய்ந்தார். எனவே இவர் ‘பொன்வேய்ந்தசோழன்” என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் கிராமநிர்வாகம் சிறப்புற்று காணப்பட்டது. பராந்தகனுக்குப் பிறகு கண்டராதித்தியன். அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் அரசாண்டனர்.
முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014
இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். திருவலாங்காடு செப்பேடுகள் இராஜராஜன் பற்றி கூறுகின்றன. இவர் சோழர் குலத்தின் மிகவலிமை மிக்க மன்னராவார். முதலாம் இராஸராஸ சோழனின் சிறப்புகள் சோழ நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றன. இவர் காலத்தில் பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டன.இராஜராஜனிடம் வலிமை மிக்க ராணுவம் இருந்தது. இவர் சேரரின் ராணுவத்தை திருவனந்தபுரத்தில் தோற்கடித்தார். இவர் கொல்லத்தை சார்ந்த பாஸ்கர ரவி எ்னற மன்னனையும் தோற்கடித்து, ‘காந்தளூர்சாலை கலமருதளிய’ என்ற பட்டம் பெற்றார். இவர் அமரபுஜங்கன என்ற பாண்டிய மன்னனை வென்றார். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனு ராதபுரத்தையும் இலங்கையின் வடபகுதியையும் இவர் கைப்பற்றினார். இவர் புலனருவா நகரத்தைப் புதிய தலைநகராக்கி அங்கு பல கோவில்களைக் கட்டினார். இவர் சேர, பாண்டிய, இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று
மும்முடி சோழன்” என்ற பட்டம் பெற்றார். இவர் மைசூர் பகுதியில் உள்ள கங்கபடி, தடிகை பாடி, நொளம்ப்பாடி ஆகியவற்றை வென்றார். இவர் விளிங்ஞம் என்ற பகுதியை வென்று ‘திக் விஜயம்’நடத்தினார். மாலத் தீவுகள், கலிங்கம் ஆகியவற்றையும் வென்றார். இவருக்கு ‘அருண்மொழி’, ‘இராஜகேசரி’ போன்ற பட்டங்கள் உண்டு. இராஜராஜ சோழனுக்கு அவரது மகன் பட்டத்து இளவரசானராஜேந்திரன் ஆட்சி மற்றும் போர்ப்பணிகளில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.
இராஜராஜ சோழன் ஒரு சிறந்த நிர்வாகி, தமது ஆட்சி காலத்தில் இவர் நில அளவை முறையை அறிமுகப்படுத்தினார். இவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உள்ளாட்சி நிர்வாக முறையைசிறப்பாக நடைமுறைப்படுத்தினார். இவர் தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார். இவர் புத்த மதத்தையும் சைவ சமயத்தையும் ஆதரித்தார்.நாகப்பட்டினத்தில் புத்தஆலயம் கட்டட அனுமதி அளித்ததோடு ஆனைமங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1002 – கி.பி.1044:
முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறினார். முதலாம் இராஜேந்திரனைப் பற்றி திருவாலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் ஆகியன பலதகவல்களைக் கூறுகின்றன. இவர் ஒரு சிறந்த நிர்வாகியும், போர் வீரரும் ஆவார். இவரின் தந்தையாருடைய இராணுவ தீரச்செயல்களிலும் சிறந்த நிர்வாகத்திலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவர்பதிவ ஏற்றவுடன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி இலங்கையில் சோழர் ஆட்சியை நிலை நிறுத்தினார். இவர் தனக்கு உதவ தன் மகன் இராஜாதி ராஜனை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.
தனது ஆட்சியின் போது இவர் பல சிவ ஆலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினார். இவர் வங்காள அரசன் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்து கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர்கொண்டு வந்தார். இந்நீர், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழ கங்கம் என்ற நீர்பாசன ஏரியில் சேர்க்கப்பட்டடது. இந்த வெற்றியைப் போற்றும் விதமான இராஜேந்திர சோழனுக்கு ‘கங்கைகொண்டான்” என்ற சிறப்புப்பட்டம் சூட்டப்பட்டது.
இவர் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழப்புரத்திற்கு மாற்றினார். இவர் இலங்கையை கைப்பற்றினார். பின்னர் சேர பாண்டிய அரசர்களை வெற்றிக்கொண்டார். சாளுக்கிய குலஅரசன் இரண்டாம் ஜெயசிம்மனோடு இவர் போரி்ட்டார். கலிங்கத்து அரசனையும் இவர் வெற்றிகொண்டார். இவர் ஒரு வேதக்கல்லூரியை நிறுவினார். முதலாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன்,அதிராஜேந்திரன் ஆகிய அரசர்கள் சில வருடங்கள் சோழ நாட்டை ஆட்சி செய்தனர்.
முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:
சோழர் வரலாற்றில் குலோத்துங்கசோழன் மிகப்பெரிய திருப்புனையை ஏற்படுத்தினார். குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம்,இராணுவ வெற்றிகள் பற்றி விளக்குகின்றன. இவர் சேர பாண்டிய மன்னர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மேற்கு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தியனுடன் இவர் போரிட்டார்.குலோத்துங்கன் காலத்தில் சோழப்பேரரசு மிகவும் பரந்து காணப்பட்டது. வினயாதித்யாவிடம் இருந்து வெங்கியின் ஆட்சியைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழனை சீனா போன்ற தூர கிழக்குநாடுகள் நன்கு அறிந்திருந்தன. இவர் சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பினார். இவர் இலங்கையின் வட பகுதியில் தன் ஆதிக்கத்தை இழந்தார். ஆனால் தென் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். இவர் கலிங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சோழப்பேரரசின் பொருளாதார நிலையை முன்னேற்றமடைய செய்தார். பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி முறையானநில அளவை முறையினை இவர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.
மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட பல விதமான வரிகளை நீக்கி, வரி சுமையில் இருந்து மக்களை மீட்டடதால் இவருக்கு ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது.இவர் பல நிர்வாக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சோழப் பேரரசு இவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. இவரது ஆட்சியில் உள்நாட்டு அமைதியும் சிறந்த நிர்வாகமும் சோழமக்களுக்கு கிடைத்தன.
சோழ அரசர்களில் மிகவும் சிறந்த அரசராக முதலாம் குலோத்துங்கன் கருதப்படுகிறார். அவருக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது..