வரும் 28 ஆம் தேதி முதல் மலைகோட்டை விரைவு வண்டி திருச்சி வரை மட்டுமே இயங்கும், மலைகோட்டை விரைவு வண்டி திருச்சி மக்களுக்கான வண்டி தான் அது திருச்சி வரை மட்டும் தான் இயங்கம் வேண்டும் இந்த வண்டியை மீட்டுக்க திருச்சியில் பல வித போராட்டங்களும் நடை பெற்றது, ஆகவே திருச்சியோடு நிருதபடுவதை யாரும் தவறென வாதிட முடியாது ஆனால் 28 ஆம் தேதியோடு தஞ்சை கும்பகோணம் வரை வரும் சேவையை நிறுத்துவதற்கு முன் தஞ்சாவூர்-சென்னை வண்டியை இயக்கி இருந்தால் நன்றாக இருக்கும் எப்பொழுது வரும் என்ற தேதியை கூட இன்னும் அறிவிக்கவில்லை, மொத்தமாக 250 இருக்கைகளை இழகின்றோம், மீட்டர் கேஜ் காலத்தில் தஞ்சாவூர் கும்பகோணத்திற்கு மொத்தம் 1500 இருக்கைகள் ஒதுக்கபட்டது ஆனால் அகல ரயில்பாதை அமைக்க பட்டு இன்றுவரை மொத்தம் 422 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது 7 வண்டிகள் சென்னைக்கு சென்றுகொண்டு இருந்த பாதையில் தற்பொழுது வெறும் 3 வண்டிகள் மட்டுமே சென்று கொண்டு இருகின்றது அந்த முன்று வண்டிகளிலும் நமக்கு General quota கிடையாது Pooled quota தான் என்றும் மாறுமோ இந்த நிலை