திருவையாறு - சப்தஸ்தான திருவிழா
திருவையாறு தஞ்சாவூரிலிருந்து வடக்கே 11 கி.மீல் உள்ள மூவரால் பாடப்பெற்ற, காவிரி வடகரை தலங்களில் 51ஆவது தலம். காவிரி, குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு என்ற ஐந்து நதிகள் பாயும் பிரதேசம் “ஐயாறு” (தென்னகத்தின் பஞ்சாப்) என்றழைக்கப்படுகிறது. துரத்திவந்த எமனை விலக்கி அருளிய ஆட்கொண்டார் (சிவனின் மறு வடிவம் - தெற்கு நோக்கிய கோலம்) சந்நிதி இங்கு பிரசித்தமானது. இவருக்கு வடைமாலை சாந்தி குங்கிலியம் வாங்கி தீக்குழியில் போட்டு எரியவிட்டால் எம பயம் வராது என்ற நம்பிக்கை உண்டு. சிவனுக்கு வடைமாலை சாற்றுவது என்பது வேறு எந்தத் தலத்திலும் இல்லாத ஒரு சிறப்பு. ஆடி அமாவாசை அன்று அப்பருக்குக் கயிலாயக் காட்சியை அருளி, பூலோகத்தில் உள்ள கயிலாயம் திருவையாறுதான் என்று சிவபெருமானால் கூறப்பட்ட தலம். சுந்தரர் இறைவனைத் தரிசிப்பதற்காகக் காவிரி வழிவிட்ட தலம். சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம். இறைவன் ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர், ஐயாறப்பர், பிரணதார்த்தி ஹரன் என்றும் இறைவி தர்மசம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
திருவையாறும் அதனைச் சுற்றியுள்ள மற்றைய ஆறு தலங்களும் இணைந்து சித்திரைப் பெருவிழாவை விமரிசையாகக் கொண்டாடுவதால் திருவையாறு - சப்தஸ்தானம் என்று பெயர் பெற்றது. தஞ்சை மாவட்டத்தில் சக்கராபள்ளி, திரு நீலக்குடி, கும்பகோணம் போன்ற தலங்களிலும் சப்தஸ்தான திருவிழா நடந்தாலும் திருவையாறு சப்தஸ்தானமே பெருஞ்சிறப்பு பெற்ற திருவிழாவாக அமைகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் திருவிழா நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தலத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்த நந்தியை அவருடைய ரிஷப முகம் காரணமாக அவர் குடும்பத்தினர் ஒதுக்கி, கோயிலின் உள்ளே சென்று பஞ்ச நதீஸ்வரர் சன்னிதி முன் போட்டுவிட, சிவனே அவரை வளர்த்து எல்லாக் கலைகளையும் அவருக்குக் கற்றுக்கொடுக்கிறார். திருமண வயதை அடைந்தவுடன் அருகில் உள்ள திருமழபாடி என்ற தலத்திற்குச் சென்று அங்கு வசிக்கும் சிவ பக்தரான வியாக்ர பாதரின் திருமகளான சுய சாம்பிகையை, நந்திக்குத் திருமணம் முடித்து வைக்கிறார். இந்தத் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம், நவமி திதியில் மாலை 7மணிக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணம் தடைபட்டவர்கள் திருமழபாடிக்கு வந்து நந்தியின் கல்யாணத்தைப் பார்த்து பிரார்த்தனை செய்துகொண்டால் அடுத்த ஆண்டு வரும் நந்தியின் திருமணத்திற்கு முன், அவர்களுக்குத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. எனவேதான் “நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்” என்ற பழமொழி ஏற்பட்டுள்ளது. நந்தியின் கல்யாணம் சிறப்பாக நடந்தேற மற்ற ஆறு தலங்களின் இறைவர்களும் உதவி புரிந்ததால் அவர்களுக்கு நன்றி கூறவும் மணமக்கள் அவர்களிடம் ஆசி கூறவும் அவர்களை அழைத்து வந்து திருவையாற்றில் விருந்து உபசரிப்பு நிகழ்த்துவதற்கும் ஏற்பட்ட விழாவே சப்தஸ்தான திருவிழா ஆகும்.
திருவையாறு - சப்தஸ்தான திருவிழா
சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமி திதியில் திருவையாறு ஆலயத்தில் கொடியேறி 13 நாள் விழாவாக, சப்தஸ்தான விழாவாக விமரிசையாக நடைபெறுகிறது. ஐந்தாம் திருநாள் அன்று மாலை இங்கு இறைவன் தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சியும் சந்நிதியின் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை செய்து அன்னம் பாலிப்பும் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு மற்றைய ஆறு தலங்களிலிருந்து இறைவனும் இறைவியும் துணியால் ஆன பல்லக்கில் திருவையாற்றுக்கு வந்து ஒன்பதாம் திருவிழா வரை அங்கு தங்கியிருந்து தினமும் திருவையாறு மாட வீதிகளில் திருவையாற்று இறைவருடன் உலா வந்து பிறக ஊர் திரும்புவது விசேஷமான ஒன்று. 5ஆம் திருநாளன்று சதுர்முக சப்பரமும், 7ஆம் நாளன்று ரதமும், 9ஆம் நாளன்று தேரோட்டமும் நடைபெறுகிறது.
சித்ரா பௌர்ணமியை அடுத்த விசாக நட்சத்திரத்து அன்று காலை 6மணியளவில் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீ ஐயாறப்பருடன் கண்ணாடிப் பல்லக்கிலும் நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் மணக்கோலத்துடன் வெட்டிவேர் பல்லக்கிலும் திருவையாற்றிலிருந்து கிளம்பி மற்றைய ஆறு தலங்களுக்கும் சென்று அந்தத் தலங்களின் மாட வீதிகளில் வலம்வந்த ஆறு தலங்களின் இறைவன், இறைவியையும் கண்ணாடிப் பல்லக்குகளில் அழைத்துக்கொண்டு மறுநாள் மதியம் திருவையாறு வந்தடைவதே இந்தத் திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சி.
திருவையாற்றின் மாட வீதிகளில் ஏழூர் பல்லக்குகளும் நந்திகேஸ்வரரும் உலா வருவதும் அதைத் தரிசிப்பதும் கண் கொள்ளாக் காட்சியாகும். சுமார் 21 கி.மீ தூரம் உள்ள இந்த வழிகளில் அந்தந்த ஊர் மக்கள் பந்தல் அமைத்துப் பாத யாத்திரையாக, வரும் பக்தர்களுக்குப் பானகம், நீர்மோர், தண்ணீர், சிற்றுண்டி, பகல் உணவு கொடுத்து உபசரிக்கிறார்கள். திருவையாற்றில் தொடங்கி ஆறு தலங்களையும் நடை பயணமாக வலம்வந்து அந்த ஊர் இறைவனைத் தரிசித்து மீண்டும் திருவையாற்றை அடுத்த நாள் மதியம் அடைவதே சப்தஸ்தான ஏழூர் வலம் வரும் விழா ஆகும்.
திருவையாற்றின் கோபுர வாசலுக்கு எல்லா ஊர் இறைவரும் வந்தவுடன் திருவையாறு இறைவருக்குப் பொம்மை மூலம் பூப்போடுதல் நிகழ்ச்சி நடைபெறும். அது முடிந்து மற்ற தலத்து இறைவர்கள் திருவையாறு ஆலயத்திற்குள் சென்று தங்கி, உபசரிப்புகளை ஏற்றுக்கொண்டு அன்று இரவே அவர்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கின்றனர்.
இந்த ஆண்டு வரும் 16.4.2013 முதல் 29.4.2013 வரை சித்திரைத் திருவிழாவும் 28.4.2013 அன்று சப்தஸ்தல பிரதட்சண விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு ஏழு ஊர்களையும் வலம்வந்து இறைவர்களின் அருளைப் பெறுமாறு வேண்டுகிறோம்.

No comments:
Post a Comment