Thursday, June 19, 2014

தமிழ் பேசினால் 120ஆண்டுகள் உயிர் வாழலாம்..

தமிழ் பேசினால் 120ஆண்டுகள் உயிர் வாழலாம்-
உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.
(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)
ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.
இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!
1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

Wednesday, June 18, 2014

Sunday, June 8, 2014

அன்றே சொன்னார்...


"நான் இந்தியா முழுவதும் பயனம் செய்தேன்.அங்கு ஒரு பிச்சைக்காரனையோ ,திருடனையோ பார்க்க முடியவில்லை.
செல்வ வளம் அங்கு கொட்டிக் கிடைக்கிறது.உயர்ந்த நீதி நெறிகள்,ஒழுக்கம் நிறைந்த மக்கள் காணப்படுகின்றனர்.
நாம் அந்த நாட்டை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என நினைக்கின்றேன். அவர்கள் ஆன்மீகம்,பண்பாடு என்ற பாரம்பரியம் உள்ளவர்கள்.
அந்த நாட்டின் இந்த முதுகெலும்பை உடைக்காமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அவர்களது பழைய புராதனக் கல்வி முறையையும்,பண்பாட்டையும் அடியோடு அகற்ற வேண்டுமென்று நான் முன் மொழிகிறேன்.
அந்நிய மொழி என்று கருதாமல் நம்முடைய ஆங்கிலமே அவர்களது மொழியைவிட சிறந்தது என்று இந்தியர்கள் கருதத் தொடங்கிவிட்டால் அவர்கள் தங்கள் சுயமரியாதையை கொஞ்சம்,கொஞ்சமா க இழந்துவிடுவார்கள்.
அதன்பிறகு தங்கள் நாட்டையும்,சுய பண்பாட்டையும் மறந்து விடுவார்கள். பிறகு நாம் விரும்புகிறபடி நடப்பார்கள்.
உண்மையிலேயே அந்த நாடு நமது ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும்.".. 2-2-1835 -ல் பிரிட்டீஷ் பார்லிமெண்டில் லார்டு மெக்காலே பேசியது இதுதான்.
இந்த 178 ஆண்டுகளில், இந்த ஆங்கிலம் என்ற கல்வி முறை மூலம், நாம் நமது தாய் மொழியையும், பண்பாட்டையும் உருக்குலைத்து விட்டோம்..