"நான் இந்தியா முழுவதும் பயனம் செய்தேன்.அங்கு ஒரு பிச்சைக்காரனையோ ,திருடனையோ பார்க்க முடியவில்லை.
செல்வ வளம் அங்கு கொட்டிக் கிடைக்கிறது.உயர்ந்த நீதி நெறிகள்,ஒழுக்கம் நிறைந்த மக்கள் காணப்படுகின்றனர்.
நாம் அந்த நாட்டை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என நினைக்கின்றேன். அவர்கள் ஆன்மீகம்,பண்பாடு என்ற பாரம்பரியம் உள்ளவர்கள்.
அந்த நாட்டின் இந்த முதுகெலும்பை உடைக்காமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அவர்களது பழைய புராதனக் கல்வி முறையையும்,பண்பாட்டையும் அடியோடு அகற்ற வேண்டுமென்று நான் முன் மொழிகிறேன்.
அந்நிய மொழி என்று கருதாமல் நம்முடைய ஆங்கிலமே அவர்களது மொழியைவிட சிறந்தது என்று இந்தியர்கள் கருதத் தொடங்கிவிட்டால் அவர்கள் தங்கள் சுயமரியாதையை கொஞ்சம்,கொஞ்சமா க இழந்துவிடுவார்கள்.
அதன்பிறகு தங்கள் நாட்டையும்,சுய பண்பாட்டையும் மறந்து விடுவார்கள். பிறகு நாம் விரும்புகிறபடி நடப்பார்கள்.
உண்மையிலேயே அந்த நாடு நமது ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும்.".. 2-2-1835 -ல் பிரிட்டீஷ் பார்லிமெண்டில் லார்டு மெக்காலே பேசியது இதுதான்.
இந்த 178 ஆண்டுகளில், இந்த ஆங்கிலம் என்ற கல்வி முறை மூலம், நாம் நமது தாய் மொழியையும், பண்பாட்டையும் உருக்குலைத்து விட்டோம்..
No comments:
Post a Comment