Tuesday, August 1, 2017

மறக்கப்பட்ட நமது பெருமைகள்.... பெரிய கோவில்......

மறக்கப்பட்ட நமது பெருமைகள்....
தொடர்ச்சி ...1
பெரிய கோவில்......
ஆங்கிலேயர்கள் வரவில்லையெனில் நாம் முட்டாளாகா இருந்திருப்போம் என்பவர்களுக்காக....
இராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம்,கட்டிடக்கலை மட்டுமல்ல,கணிதவியல்,ராணுவக் கட்டுப்பாடு,மருத்துவத் துறை,சிற்பக்கலை,உணவில் தன்னிறைவு,இன்னும் பலவற்றில் நம் முன்னோர்கள் ஆகச்சிறந்தவர்கள் என பறைசாற்றி கம்பீரமாய் நிற்கிறது..
இதெல்லாமா???ஆம்
இந்தக் கோவில் முழுக்க கிரானைட் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டது,மண்,சாந்து என எதுவும் இல்லாமல் கட்டப்பட்ட சிறப்புமிக்க கோவில்,அதானால் இது "கற்றளி" என அழைக்கப்படுகிறது.அதுவும் பாறைகளே இல்லாத ஊரில் ஒருமில்லியன ்டன் பாறைகளை எங்கிருந்து எந்த வாகனங்களில் கொண்டு வந்திருப்பார்கள்,அதுவும் ஒரே கல்லிலான விமானம் போன்ற அதிக எடையுள்ள பாறைகளை கொண்டுவர எத்துனை குதிரைகளும்,யானைகளும் பயன்பட்டிருக்கும்.அதைக்கட்டுப் படுத்த எத்தனை வீரர்கள் இருந்திருப்பார்கள்....
அதோடு ஒரு லட்சம் அடிமைகளைப் பயன்படுத்தி ஏழு வருடங்களில் கட்டிமுடிக்கப்பட என்ன ஒரு திட்டமிடல் மேலாண்மை அறிவு இருந்திருக்கவேண்டும்..
ஒரு லட்சம் கைதிகளை கட்டுப்படுத்த எத்தனை படை வீரர்கள் இருந்திருப்பார்கள்.. சிற்பகலைஞர்களின் மனம் ஒன்றிய செயல்பாடுகளினாலே சிறப்பாக செதுக்கப்பட்ட சிற்பங்கள்..இத்தனை லட்சம் பேர்களுக்கு ஏழு வருடங்களுக்கான உணவில் தன்னிறைவில்லாமல்
நிச்சயமாய் அவர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாது.. இத்துனை பேர்களுக்கு எத்தனை மருத்துவர்கள் இருந்திருப்பார்கள்...
இனி கோவிலின் சிறப்பைக் காண்போம்....
கோவிலின் விமானம் 80 டன்னால் ஒரே கல்லிலானது.அதை அவ்வளவு உயரத்தில் ஏற்ற என்ன மாதிரியான கருவிகள் பயன்படுத்தியிருப்பார்கள்.
இதற்கெல்லாம் மகுடமாய் தமிழ் மொழியை உயிராய் மதித்து கட்டப்பட்ட கோவிலாகவும்,இது விளங்குகிறது.
உயிரெழுத்து பனிரெண்டு
..லிங்கம் 12 அடி
மெய்யெழுத்து18...
சிவலிங்கபீடம் 18 அடி
உயிர்மெய்யெழுத்து 216
கோபுரஉயரம் 216 அடி
ஆய்த எழுத்து 1..
கோவில்களில் முதலானது...
மொத்தம் 247 ...
லிங்கத்திற்கும் நந்திக்கும் இடையேயுள்ள தூரம் 247 அடி....இதிலிருந்து நம் முன்னோர்களின் திறமைகளை அறியலாம்.இதெல்லாம் சிறுதுளியளவே...

No comments:

Post a Comment